யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற கல்வி ஆய்வு நூல் வெளியீட்டு விழா
மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) ஆய்வுகள் அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் கலாநிதி எஸ்.கே பிரபாகரன் அவர்கள் எழுதிய கல்வி ஆய்வு அடிப்படைகள் என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று 03.05.2025 சனி மாலை தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மண்டபத்தில் அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில் சிறப்புற நடைபெற்றது
பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்கள் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் அவர்களும் கலந்து கொண்டனர்
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கணேசப்பிரியா பிரபாகரன் நூலின் வெளியீட்டுரையை ஆற்றினார்
நூலின் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் கலாநிதி ஆ. நித்திலவர்ணன் ஆற்றினார்
நிகழ்வில் கல்வி சமூகத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.








