;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1776698.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

வீட்டில் தனிமையில் இருந்த இளம் யுவதிக்கு நேர்ந்த கதி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

0

கொழும்பு கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் யுவதியொருவர், தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
சம்பவத்தில் உயிரிழந்தவர் புதம்மினி துரஞ்சா என்ற 19 வயது திருமணமாகாத யுவதி என பொலிஸார் தெரிவித்தனர்.

தீக்கிரையான யுவதியின் உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் கூரைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இறந்த யுவதியின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வெசாக் தோரணங்களை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த போதே இவர் தீ விபத்துக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர தீயணைப்பு பிரிவும், அப்பகுதி மக்களும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் யுவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் நுகேகொடை குற்றப்பிரிவினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.