பாலத்தில் மோதிய மோட்டார் சைக்கிளால் பலியான இரு இளைஞர்கள் ; தமிழர் பகுதியில் சம்பவம்
நேற்று திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி சென்ற இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வாகரை பனிச்சங்கேணி பாலத்தில் விபத்துக்குள்ளானதில் விபத்தில் சிக்கிய இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்கள் ஓட்டமாவடி பதுறியா நகரைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளது.
இவர்களது சடலம் மட்டு வாகரை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.