பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர வேண்டி யாழ். நாக விகாரையில் சர்வதமத பிரார்த்தனை
நாட்டில் ஏற்பட்ட பேரனார்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நாக விகாரையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் , யாழ் நாக விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
பேரிடரில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , படுகாயங்களுக்கு உள்ளானவர்கள் பூரண குணமடைய வேண்டியும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதில் இருந்து மீண்டும் மலரவிருக்கும் புத்தாண்டில் நிம்மதியான வாழ்வை வாழ வேண்டியும் சர்வமத பிரார்த்தனை இடம்பெற்றது.





