முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் யொஹான் பெர்னாண்டோ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பாகமுவ, கும்புக்வெவ பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனமான சதொசவுக்கு சொந்தமான பார ஊர்தியொன்றை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைதான யொஹான் பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.