அமெரிக்கா பல்கலை பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிசூடு ; 2 பேர் பலி
அமெரிக்காவின் மினியாபோலீஸ் நகரில் மினசோட்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
அந்த பல்கலைக்கழகத்தின் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஒரு மாணவன் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிசூடு நடத்திய மாணவனை கைது செய்தனர்.
இதனையடுத்து அந்த பல்கலைக்கழக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.