;
Athirady Tamil News

ரூ.30 கோடி லொட்டரியை காதலிக்கு வழங்கிய இளைஞர் – ஆண் நண்பருடன் மாயமான பெண்

0

ரூ.30 கோடி லொட்டரியை இளைஞர் காதலிக்கு வழங்கிய பின்னர், அந்த பெண் பணத்துடன் ஆண் நண்பருடன் மாயமாகியுள்ளார்.

கனடாவை சேர்ந்த Lawrence Campbell என்ற நபர், தனது காதலியான Krystal Ann McKay என்பவருடன் ஒன்றரை ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ரூ.30 கோடி லொட்டரி
கடந்த 2024 ஜனவரி 19 அன்று, கேம்பெல் ஒரு கனடா லொட்டேரி ஒன்றை வாங்கியுள்ளார். அந்த லொட்டரியில் அவருக்கு 5 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.30 கோடி) பரிசு விழுந்துள்ளது.

அந்த பரிசுத்தொகையை பெற இருவரும் இணைந்து சென்ற போது, கேம்பெலிடம் முறையான அரசாங்க அடையாள அட்டை இல்லாததால், அவரால் அந்த பணத்தை உரிமை கோர முடியாது.

ஆனால் அவரது காதலி மெக்கே அந்த லொட்டரியை உரிமை கோர முடியும் என லொட்டரி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 30, 2024 அன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​மெக்கே அதிகாரப்பூர்வமாக ரூ.30 கோடிக்கான காசோலையைப் பெற்றார்.

மாயமான காதலி

இதை கேம்பெல் தனது பிறந்தநாள் பரிசாக அளிப்பதாக மெக்கே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். கேம்பெலுக்கு வங்கி கணக்கு இல்லாததால், ரூ.30 கோடியை மெக்கேவின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.

இதன் பிறகு சில நாட்களில், மெக்கே கேம்பெலின் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விட்டார். அவரது செல்போன் எண் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ப்ளாக் செய்து விட்டார்.

இதனையடுத்து, கேம்பெல் மெக்கேவை அவருக்கு தெரிந்த பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது மெக்கே அவரது ஆண் நண்பருடன் வசித்து வருவது தெரிய வந்துள்ளது.

இதனை தெரிந்து அதிர்ச்சியடைந்த கேம்பெல், அந்த பணத்தை மீட்டு தர வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.