;
Athirady Tamil News

ஒரே வாரத்தில் 172 மரணங்கள்! பாதிக்கப்போகும் 10 லட்சம் பேர் – நாடொன்றை எச்சரிக்கும் ஐ.நா

0

சூடானில் பரவும் புதிய வகை காலரா தொற்று 10 லட்சம் பேரை பாதிக்கும் என ஐ.நா எச்சரித்துள்ளது.

புதிய வகை காலரா தொற்று
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்திற்கும், RSF கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவும் சூழலில் தற்போது புதிய பிரச்சனை உருவெடுத்துள்ளது.

அந்நாட்டின் தலைநகர் கார்டூம் மற்றும் ஓம்டுர்மனில் புதிய வகை காலரா தொற்று பரவல் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.

கோர்டோபான், சென்னார், காசிரா உள்ளிட்ட மாகாணங்களிலும் இந்த தொற்று வேகமாக பரவுவதால் இதுவரை 7,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உயிரையே பறிக்கும் அபாயம்
தண்ணீரால் பரவும் இந்த காலரா தொற்று அதிக வயிற்று வலியை ஏற்படுத்தி, உயிரையே பறிக்கும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 5 வயதிற்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 172 பேர் இந்த காலரா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், சூடானில் சுமார் 10 லட்சம் பேர் காலராவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே உள்நாட்டு போரால் பொருளாதார நெருக்கடியை அரசு சந்தித்து வரும் நிலையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹைதம் முகமது இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.