;
Athirady Tamil News

மே மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு

0

2025 மே மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6,284 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, 2025 ஏப்ரல் இறுதியில் பதிவான 6,327 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு சொத்துக்களுடன் ஒப்பிடும்போது 0.7% குறைவாகும்.

இலங்கை மத்திய வங்கி 2025 மே மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 260.8 மில்லியன் டொலர்களை வாங்கி 4 மில்லியன் டொலர்களை விற்பனை செய்துள்ளது.

அதன்படி, 2025 மே மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி வாங்கிய டொலர்களின் நிகர தொகை 256.8 மில்லியன் டொலர்கள் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.