;
Athirady Tamil News

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் – வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு

0

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் – வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு

கனடா அரசு புதிய குடியுரிமை மசோதாவை (Bill C-3) ஜூன் 5, 2025 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மசோதா, வெளிநாட்டில் பிறந்த கனடியர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் குடியுரிமையை வழங்க முடியாதது போன்ற தடைகளை நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

2009-ல் அமுலுக்கு வந்த ‘first-generation limit’ காரணமாக, வெளிநாட்டில் பிறந்த கனேடியர்களின் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறந்தால், அவர்களுக்கு தானாக குடியுரிமை கிடைக்காது. இந்த வரம்பு இனி நீக்கப்பட உள்ளது.

Bill C-3 என்ன சொல்கிறது?
இந்த மசோதா, கடந்தகால சட்டங்களால் குடியுரிமையை இழந்தவர்களுக்கும் புதிய வாய்ப்பு அளிக்கிறது.

மேலும், எதிர்காலத்தில் வெளிநாட்டில் பிறக்கும் பிள்ளைகளுக்கு குடியுரிமை கிடைக்க, பெற்றோரில் ஒருவருக்காவது கனடாவுடன் “முக்கியமான தொடர்பு” இருக்க வேண்டும்.

இந்த “முக்கிய தொடர்பு” என்பது பிள்ளை பிறக்கும் முன் பெற்றோர் கனடாவில் கூட்டாக 1,095 நாட்கள் (3 வருடங்கள்) வாழ்ந்திருக்கவேண்டும் (physical presence) வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

இந்த மசோதாவை முன்வைத்த Lena Metlege Diab அமைச்சர், “குடியுரிமை என்பது சட்ட அந்தஸ்து மட்டும் அல்ல, அது கனடாவின் மதிப்புகள், வரலாறு மற்றும் உணர்வுடன் கூடிய உறவு.” என கூறியுள்ளார்.

2023 டிசம்பரில், ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் “first-generation limit” அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாகத் தீர்மானித்தது. இதனையடுத்து அரசு இந்த மசோதாவை கொண்டுவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.