;
Athirady Tamil News

4 சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவு

0

தங்களது 5 சங்கங்களில் 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்ததாக அதன் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

தொடர் வேலைநிறுத்தத்தில் ஆய்வக வல்லுநர்கள்
எனினும், மருத்துவ ஆய்வக வல்லுநர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பிரச்சினைகள், பதவி உயர்வுகளில் தாமதம், சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 5 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் நேற்று முன்தினம் (05) காலை 8 மணிக்கு ஒரு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.

இது நோயாளர்களுக்கு கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தியது. சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வரமாட்டார் என தெரிவித்தே, வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் தற்போது 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.