;
Athirady Tamil News

2024-ல் டிரம்பை ஆதரித்த வாக்காளர்களில் 64% பேர் போருக்கு எதிராக உள்ளனர்!

0

இஸ்ரேல் – ஈரான் போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 சதவீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜனநாயக மையம் (டெமாக்ரஸி இன்ஸ்டிடியூட்) மற்றும் கிரே ஹவுஸ் ஆகியவை தனித்தனியாக டிரம்ப் வாக்காளர்களிடம் இஸ்ரேல் – ஈரான் போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கருத்துக் கணிப்புகளை நடத்தியிருக்கிறது.

ஜனநாயக அமையம் கேட்டிருக்கும் கேள்வியில், அமெரிக்கா போரில் பங்கேற்க வேண்டுமா? ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகளை அனுப்புவது உள்ளிட்டவற்றில் ஈடுபட வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு வாக்காளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

அதன்படி, இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்ற, டிரம்புக்கு ஆதவாக 2024ல் வாக்களித்த 1,150பேரில் 64 சதவீதம் பேர், ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகளை அனுப்புவதற்கு எதிராகவும், 26 சதவீதம் பேர் ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதாவது 736 பேர் வேண்டாம் என்று பதிவிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிமை முதல் திங்கள் வரை இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மேற்கண்டவர்களுடன் 1,250 பணியாற்றும் வாக்காளர்களும் பங்கேற்றுள்ளனர்.

கிரே ஹவுஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், 67 சதவீதம் பேர் ஈரானுக்கு எதிரான தாக்குதலை ஆதரித்திருக்கிறார்கள். 16 சதவீதம் பேர் மறுக்கவில்லை, இந்தக் கருத்துக் கணிப்பானது 450 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், 35 சதவீதம் பேர், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நேரடியாக தாக்குதலைத் தொடங்கி, அணு ஆயுத உற்பத்தியை தடுக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 37 சதவீதம் பேர் மறுக்கவில்லை. இந்த கருத்துக் கணிப்பில் படைகளை அனுப்புவது குறித்து கேள்வி இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.