;
Athirady Tamil News

விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் சகோதரர் உயிரிழப்பு.., கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் விஸ்வாஸ்

0

விமான விபத்தில் உயிரிழந்த சகோதரரை பார்த்து உயிர் தப்பிய பயணி கதறி அழும் வீடியோ காண்போரை கலங்க வைத்துள்ளது.

கண்ணீர் மல்க அஞ்சலி
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.

இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர விபத்தில் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களையும் சேர்ந்து மொத்தம் இறப்பு எண்னிக்கை 274 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் விஸ்வாஸ் குமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் தப்பித்துள்ளார். அதற்கு காரணம் அவர் அமர்ந்திருந்த 11ஏ இருக்கை தான். ஆனால், அவரது சகோதரர் அஜய் குமார் ரமேஷ் 19ஏ இருக்கையில் இருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இவரது இறுதிச்சடங்குகள் குஜராத் மாநிலம் டையூவில் நடைபெற்றது. அப்போது, விஸ்வாஸ் குமார் கண்ணீர் மல்க அழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.