;
Athirady Tamil News

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள்களும் மருமகனும் கைது

0

இலங்கை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மற்றைய இரண்டு மகள்களான சாமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிக்கா ரம்புக்வெல்ல மற்றும் அவரது கணவர் ஆகியோர் பண மோசடி குற்றச்சாட்டில் இலஞ்சம், ஊழல் ஒழிப்பு விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் ரூபாய் 134 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் தொடர்பான இலஞ்சம், ஊழல் ஒழிப்பு விசாரணை குழுவில் இன்று (19) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

விளக்கமறியலில் கெஹலிய ரம்புக்வெல்ல
அதில், ரூ. 40 மில்லியன் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ. 20.5 மில்லியன் மதிப்புள்ள பென்ஸ் கார் மற்றும் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்ட கிட்டத்தட்ட 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள். அதேவேளை நேற்று (18) அமைச்சர் ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மற்றொரு மகளையும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால்,விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.