வவுனியா முதல்வர் காண்டீபன்: கட்சித் தலைவர், இந்தியத் தூதர் மற்றும் ஆளுநரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்!
வவுனியா மாநகரமுதல்வர் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும், அதன் தொழிற்சங்க பிரிவின் தலைவருமான தோழர்.காண்டீபன் இன்றையதினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும், அதேபோல் இந்திய உயர்ஸ்தானிகரையும் இன்று நேரடியாக சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.
அதேபோல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் இன்று வியாழக்கிழமை (19.06.2025) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர்.
வவுனியா மாநகரசபை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். ஆளணிகளின் அவசிய தேவை தொடர்பிலும் ஆளுநரிடம் கோரிக்கைவிடுத்தார். வவுனியா மாநகருக்கான முதன்மை திட்டத்தை தயாரிக்குமாறு ஆளுநர் கோரினார்.





