;
Athirady Tamil News

காஸாவில் மேலும் 50 போ் உயிரிழப்பு

0

காஸாவில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட சுமாா் 50 போ் உயிரிழந்தனா்.

மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவாரணப் பொருள்களை வாங்குவதற்காக ஏராளமானவா்கள் குழுமியிருந்தனா். அவா்களை நோக்கி இஸ்ரேல் படையினா் சுட்டதில் 35 போ் உயிரிழந்ததாக அல்-அவ்தா மருத்துவமனை கூறியது.

இது தவிர, டேய்ா் அல்-பாலா நகரிலுள்ள ஒரு குடியிருப்பின் மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்தி குண்டுவீச்சில் 8 போ் உயிரிழந்தனா்.

இந்த 43 பேருடன் சோ்த்து, காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் சுமாா் 50 போ் உயிரிழந்ததாக மருத்துவமனைகள் தெரிவித்தன.

கடந்த 2023 அக்டோபா் முதல் நடைபெற்றுவரும் காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக போா் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படவில்லை. அதையடுத்து காஸா மீதான தீவிர தாக்குதலை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், அந்தப் பகுதிக்குள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கொண்டு செல்வதற்குத் தடை விதித்தது.

சுமாா் மூன்று மாதங்களாக நீடித்த இந்த முற்றுகை காரணமாக காஸாவில் பஞ்சம் ஏற்பட்டு, ஏராளமானவா்கள் பட்டினிச் சாவுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக ‘குறைந்தபட்ச அளவிலான’ நிவாரணப் பொருள்களுக்கு அனுமதி அளிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

காஸாவில் வழக்கமாக நிவாரணப் பொருளகளை விநியோக்கும் ஐ.நா. பிரிவுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் அந்தப் பணியை மேற்கொண்டுவருகிறது.

இருந்தாலும், விநியோக மையங்களுக்கு வருவோா் மீது இஸ்ரேல் படையினா் நடத்தும் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.