;
Athirady Tamil News

விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல்.., ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் கைது

0

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் மருத்துவர் கைது
நேற்று பிற்பகல் 3 மணியளவில், ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் பெங்களூருவில் இருந்து சூரத் செல்ல தயாராக இருந்தது. இந்த விமானத்தில் ஆயுர்வேத பெண் மருத்துவரான வியாஸ் ஹிரல் மோகன்பாய் பயணம் செய்யவிருந்தார்.

இவர் தன்னிடம் இருந்த இரண்டு கைப்பைகளில் ஒன்றை தனது இருக்கை 20F-லும், மற்றொன்றை விமான ஊழியர்கள் அமரும் இருக்கையிலும் வைத்துள்ளார்.

இதைப் பார்த்த விமான ஊழியர்கள், அந்த பையை எடுத்து ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த பெண் மருத்துவர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், “எனது பையை எடுத்தால் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்” என அச்சுறுத்தியுள்ளார். இதன்பின்னர் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு விமானி தகவல் அளித்துள்ளார்.

அதன்படி, பாதுகாப்புப் படையினர் வியாஸ் ஹிரலை விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்தனர். இதனால் இரண்டு மணிநேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.