;
Athirady Tamil News

தமிழ்த் தேசிய சக்திகளின் கூட்டிணைவு ஆட்சியே வலி கிழக்கில் ஏற்பட்டுள்ளது – பதவி ஏற்றபின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ்

0

தமிழ்த் தேசிய சக்திகளின் கூட்டிணைவு ஆட்சியே வலி கிழக்கில் இடம்பெற்றது என்பதையிட்டு தமிழ்த் தேசிய கொள்கைக் கூட்டினரான நாம் பெருமைப்படுகின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

பதவி ஏற்றபின் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் எமது மக்கள் தமிழ்த் தேசிய கொள்கை வழி அரசியலையும் இலட்சியபூர்வமாக நேசிக்கின்றனர். எமது இனம் அரசியல் ரீதியில் நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் விடயமாக உள்ள10ராட்சி மன்ற மன்றங்களை கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் அரசியலின் அடிப்படை தளம் என்ற அடிப்படையிலும் எமது கிராமங்களை நிர்வகிப்பதற்கான அலகுஎன்ற அடிப்படையிலும் இவ் அலகுகூட தேசிய அரசியலின் இருப்பிடமாகவும் கொள்கைவழி பயணத்தின் தளமாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

அந்த அடிப்படையில் ஏற்கனவே கொள்கைவழி கூட்டாக இயங்கும் தமிழ்த் தேசிய பேரவை(சைக்கிள்) மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (சங்கு) கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் முழுமையான உறுப்பினர்கள், கௌரவ உறுப்பினர் இ.ஐங்கரன் மற்றும் தொழிலதிபர் சுலக்சன் தலைமையிலான சுயேற்சைக்குழுக்களின் முழுமையான உத்தியோகபூர்வ பங்களிப்பு மற்றும் பகுதியளவில் தமிழரசுக் கட்சி(வீடு) மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி(மான்) ஆகியன வெற்றிக்கு தேவையான தமது பகுதியளவு பங்களிப்பினை நல்கியுள்ளன. ஆகவே இங்கு அமையப்பெற்றது தமிழ்த் தேசிய சக்தியின் கூட்டு ஆட்சியாகும். சபையில் நாம் பெற்றதை வெற்றியாகக் கருதவேண்டாம். நாம் அடைந்துள்ளது தேசியத்தின் உறுதியான நிலைப்பாட்டுடன் கொள்கைவழி அரசியலை முன்னெடுப்பதற்கான பொறுப்பே எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் 5 வருடங்கள் சபையில் ஆட்சியை அரசியல் கட்சி பாரபட்சமற்ற வகையில் நான் முன்னெடுத்துள்ளேன். அவ்வாறாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாகவும் ஊழலற்ற வகையில் கொள்கைவழி அபிவிருத்தியை முன்னெடுத்தமைக்கும் மத்திய அரசாங்கம் உள்ள10ராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மீறியபோது போராடியமைக்குமாகவே எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஆணையினை எமது சபையின் கொளரவ உறுப்பினர்கள் தந்தார்கள். ஒத்தழைத்த உறுப்பினர்களின் நிபந்தனை வலி கிழக்கின் மாண்பை மேலும் உயர்த்துகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
news18062025

You might also like

Leave A Reply

Your email address will not be published.