;
Athirady Tamil News

விண்வெளிக்கு செல்லும் ஆந்திர இளம்பெண்

0

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவை சேர்ந்தவர் டாங்கெட்டி ஜாஹ்ன்வி. விண்வெளி வீரரான இவர் 2029-ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டதாரியான ஜாஹன்வி, நாசாவின் மதிப்புமிக்க சர்வதேச வான் மற்றும் விண்வெளித்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அமெரிக்காவை தளமாக கொண்ட டைட்டனின் ஆர்ப்பிட்டல் போர்ட் விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஜாஹ்ன்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த திட்டம் அடுத்த 4 ஆண்டுகளில் தொடங்கப்பட உள்ளது. ஜாஹ்னவின் பெற்றோர் ஸ்ரீனிவாஸ் மற்றும் பத்மஸ்ரீ தற்போது வேலைக்காக குவைத்தில் வசித்து வருகின்றனர். விண்வெளி ஆர்வலரான ஜாஹ்ன்வி தனது இடைநிலை கல்வியை தனது சொந்த ஊரான பால கொல்லுவில் முடித்தார். பிறகு பஞ்சாப்பில் உள்ள லவ்லி புரபஷினல் பல்கலைக்கழகத்தில் இளங்களை படிப்பை படித்தார்.

ஜாஹ்ன்வி கல்வி மற்றும் விண்வெளித்துறையில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.அவர் இஸ்ரோவின் கல்வி திட்டங்களுக்காக உரைகளை நிகழ்த்தி உள்ளார். நாடு முழுவதும் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் மாணவர்களிடம் உரையாற்றி உள்ளார். அனலாக் பயணங்கள், ஆழ்கடல் டைவிங் மற்றும் நீண்ட கால விண்வெளி பயணத்தில் கிரக அறிவியல் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான உலகளாவிய மாநாடுகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

ஜாஹ்ன்வி இளைய வெளிநாட்டு அனலாக் விண்வெளி வீராங்கனை மற்றும் வின்வெளி ஐஸ்லாந்தின் புவியியல் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார். ஜாஹ்ன்வி நாசா விண்வெளி ஆப்ஸ் சவாலில் மக்கள் தேர்வு விருது மற்றும் இஸ்ரோ உலக விண்வெளி வார இளம் சாதனையாளர் விருதுகள் பெற்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.