;
Athirady Tamil News

எழுச்சி பேரணிக்கு பேரெழுச்சியாக கலந்து கொள்ளுங்கள்

0

அணையா விளக்கு போராட்டமானது இன்றைய தினம் புதன்கிழமை மனித சங்கிலி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதால் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள “அணையா விளக்கு” போராட்டத்தின் மூன்றாம் நாளான இன்றைய தினம் புதன்கிழமை காலை 10.10 மணியளவில் சுடரேற்றல் உடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை தொடர்ந்து மலரஞ்சலி இடம்பெறும்.

தொடர்ந்து, மதியம் 12 மணியளவில் யாழ். வளைவுக்கு அருகில் உள்ள போராட்ட இடத்தில் பேரணி ஆரம்பிக்கப்பட்டு , செம்மணி வீதி வழியாக ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்திற்குசென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

அங்கிருந்து தியாகி திலீபனின் நினைவிடத்திற்கு சென்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படும். அங்கிருந்து தமிழாராய்ச்சி படுகொலை நினைவிடம் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு சதுக்கம் ஆகியவற்றுக்கும் சென்று, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படும்.

இறுதியாக அணையா விளக்கு காற்றுடனும் நீருடனும் கலக்கவிடப்படும்.

குறித்த பேரணி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி , மக்களின் இயல்வு வாழ்க்கையை குழப்பாத வகையில் மனித சங்கிலி முறையில் இடம்பெறவுள்ளமையால் , அனைத்து தரப்பினரும் ஒருமித்த ஆதரவை வழங்கி பேரணியில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.