ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் யாழ் விஜயம்: இனப்படுகொலை பதாதைகள் காட்சிப்படுத்தல்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழினப்படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக பல்கலைக்கழக முன்றலில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களை சந்திக்கவுள்ளார்.