செம்மணி புதைகுழிக்கு சென்ற ஐ.நா. ஆணையாளர்: ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் செம்மணி புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார்.
அதன் போது செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் , புதைகுழி காணப்படும் இடத்திற்கு சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு முன்பாகவே ஊடகவியலாளர்களை பொலிஸார் தடுத்தி நிறுத்தி இருந்தனர்.