ரயில் பாதையில் கார் ஓட்டிய பெண்ணால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் ரயில் பாதையில் கார் ஓட்டிய பெண்ணொருவரால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கார் ஒன்று ரயில் பாதையில் பயணிப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்தக் காரை நிறுத்த முயன்றுள்ளனர்.
அப்போது, அந்தக் காரை ஓட்டிய பெண், தன் அருகே வரவேண்டாம் என கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடனே பொதுமக்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் பொலிசாரை அழைத்துள்ளார்கள்.
அந்த வழியாக வந்த ரயில் ஒன்றிற்கு தகவல் கொடுத்து ரயிலை நிறுத்திய அதிகாரிகள், பொலிசாருடன் சென்று காரை நிறுத்தி, காரை இயக்கிய பெண்ணைக் கைது செய்துள்ளார்கள்.
அந்தப் பெண், வேலை இல்லாததால் விரக்தியிலிருந்ததாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் ரீல்ஸ் எடுப்பதற்காக ரயில் பாதையில் காரை இயக்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.
அவர் மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவரா என்பதை அறிவதற்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.