;
Athirady Tamil News

உலகில் ஒரே ஒருவருக்கு மட்டுமே உள்ள புதிய ரத்த வகை – எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

0

உலகில் ஒருவருக்கு மட்டுமே உள்ள குவாடா நெகடிவ் என்னும் புதிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏ பாசிட்டிவ் மற்றும் ஏ நெகட்டிவ் என 47 ரத்த வகைகள் உள்ளது.

ஆனால், இதில் சில ரத்த வகைகள் மற்றும் உலகளவில் பெரும்பாலானோருக்கு இருக்கும். மற்ற ரத்த வகைகள் அரிதாக சிலருக்கே இருக்கும்.

குவாடா நெகடிவ்
இந்நிலையில், உலகில் ஒரே ஒருவருக்கு மட்டுமே உள்ள அரிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரத்த வகைக்கு குவாடா நெகடிவ் (Gwada negative) அல்லது EMD negative என பெயரிடப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டில் பிரான்ஸின் பாரிசில் உள்ள 54 வயதான பெண் ஒருவருக்கு, அறுவை சிகிச்சை செய்வதற்காக ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவரது ரத்தம் எந்த வகை என்பதை மருத்துவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

பொதுவாக அனைவரின் சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும் EMM ஆன்டிஜென், இந்த பெண்ணின் ரத்தத்தில் இல்லாதது அரிதான ஒன்றாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளுக்கு பின்னர், இந்த ரத்த வகை 48வது புதிய ரத்த வகையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ரத்தவகை அந்த பெண் அவரின் பெற்றோரிடம் இருந்து மாற்றமடைந்த மரபணுவைப் பெற்றிருக்கிறார். அவரின் தாய் தந்தைக்கு கூட இந்த ரத்தவகை இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.