கனடாவில் தொழிலுக்காக நீண்ட வரிசை ; வைரலான இந்தியப் பெண்ணின் வீடியோ
கனடாவில் சாதாரண தொழிலுக்கு கூட, நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பேர் காத்திருக்கும் காணொளியொன்றை அங்குள்ள இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இது கனடாவில் தொழில் நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் தொழிலின்மையை எடுத்துக்காட்டுகின்றது.
அத்துடன் வெளிநாட்டு வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும்.
ஆனால், சில நேரங்களில் அது நினைத்துப்பார்க்க முடியாத அளவில் ஏமாற்றங்களை கொடுக்கும் என குறித்த பெண் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.