;
Athirady Tamil News

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்., 3.4 பில்லியன் டொலர் சீனா கடனுதவி

0

நட்பு நாடான பாகிஸ்தானுக்கு சீனா 3.4 பில்லியன் டொலர் கடனுதவி செய்துள்ளது.

பாகிஸ்தானின் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க, அதன் “இரும்பு கூட்டாளி” சீனா, 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கொடுத்து உதவியுள்ளது.

இந்த நிதியுதவி பாகிஸ்தானின் வெளிநாட்டு நாணய கையிருப்பு June 30, 2025 வரை IMF-இன் குறைந்தபட்ச கோரிக்கையான USD 14 பில்லியன் இலக்கை எட்ட உதவுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில், USD 2.1 பில்லியன் கடன் கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் மத்திய வங்கியில் இருந்ததாகவும், அதை சீனா மீண்டும் நீட்டித்து வழங்கியுள்ளது.

மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் திருப்பி செலுத்திய USD 1.3 பில்லியன் வணிகக் கடனும் சீனா மீண்டும் வழங்கியுள்ளது.

மேலும், பாகிஸ்தான் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 1 பில்லியன் டொலர் மற்றும் பல்துறைக் கடன் நிறுவனங்களிடமிருந்து 500 மில்லியன் டொலர் நிதியைப் பெற்றுள்ளது.

இவை அனைத்தும் சேர்ந்து பாகிஸ்தானின் வெளிநாட்டு கையிருப்புகளை IMF தரநிலைக்கேற்ப உயர்த்தியுள்ளன.

IMF 7 பில்லியன் டொலர் நிவாரண திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் அரசு வலுவான பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.