;
Athirady Tamil News

எங்கு பார்த்தாலும் தங்கம்… 24 காரட் தங்கத்தால் வீட்டை அலங்கரித்துள்ள இந்தியர்

0

மத்தியப்பிரதேசத்திலுள்ள இந்தோரில் வாழும் ஒருவர் வீட்டிலுள்ள சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை 24 கேரட் தங்கத்தைப் பார்க்கமுடிகிறது.

எங்கு பார்த்தாலும் தங்கம்…
சமூக ஊடகப் பிரபலமான ப்ரியம் சரஸ்வத் என்பவர், இந்தோரின் ஹொட்டல் சாம்ரஜ்யம் நடத்திவரும் ஒருவரின் வீட்டை சுற்றிக்காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Priyam Saraswat (@priyamsaraswat)

10 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ள அந்த வீடியோவில், அந்த கோடீஸ்வரரின் வீட்டில் எங்கு பார்த்தாலும் தங்கத்தைப் பார்க்கமுடிகிறது.

சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டவை என்கிறார் அவர்.

சுவர் அலங்காரம், சிலைகள் என தங்கம் கண்ணில் படாத இடமே இல்லை என்றாலும், ஒரு பக்கம் தங்கள் பசுக்களுக்காக மின்விசிறிகள் உட்பட நல்ல வசதியுடன் ஒரு தொழுவம் அமைத்திருக்கிறார் அந்த கோடீஸ்வரர்.

அந்த பசுக்கள் தங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதாக அவர் நம்புகிறார்.

ஒரே ஒரு பெட்ரோல் பங்க் நடத்திவந்தேன். பெரிய குடும்பம், சமாளிக்கமுடியவில்லை. பிறகு அரசுப் பணிகளான சாலை அமைத்தல், கட்டிடங்கள் கட்டுதல் தொடர்பான ஒப்பந்ததாரராக பணி ஏற்றபிறகுதான் இவ்வளவு வசதியும் வந்தது என்கிறார்.

எங்கள் வீட்டில் பக்தியும் உண்டு, பார்ட்டியும் உண்டு என்கிறார் அவரது மனைவி.

அந்த வீடியோவைப் பார்வையிட்டவர்கள், திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது என்கிறார்கள்.

அடடா, சுவிட்ச் கூட தங்கத்திலா? சரி, சரி, அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் சரியாக செய்திருப்பார்கள் என நம்புகிறேன் என்கிறார் ஒருவர்.

’ஒரு பெட்ரோல் பங்கிலிருந்து ஹொட்டல் சாம்ராயம் வரை’, உண்மையாகவே அவர்களுடைய வாழ்க்கைக் கதை உத்வேகமளிக்கும் ஒன்றுதான் என்கிறார் மற்றொருவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.