;
Athirady Tamil News

அமெரிக்க அரிசியை வாங்க மறுக்கும் ஆசிய நாடு., வரி மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

0

அமெரிக்காவிடமிருந்து அரிசியை வாங்க மறுக்கும் ஆசிய நாடொன்றிற்கு ட்ரம்ப் வரி மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஜப்பான் அமெரிக்க அரிசியை இறக்குமதி செய்ய மறுப்பது தொடர்பாக, வர்த்தகம் சம்பந்தப்பட்ட கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக எச்சரித்துள்ளார்.

இதன் மூலம் புதிய இறக்குமதி வரிகள் விதிக்கப்படலாம் என்று அவர் கண்டிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் நம்முடைய அரிசியை வாங்க மறுக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களிடம் பாரிய அளவிலான அரிசி பற்றாக்குறை உள்ளது” என ட்ரம்ப் தனது Truth Social சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்ப போகிறோம். நாங்கள் ஜப்பானை ஒரு நம்பகமான வர்த்தக கூட்டாளியாக மதிக்கிறோம். ஆனால் சில நாடுகள் அமெரிக்காவை அடிமை நாடாகவே கருத ஆரம்பித்துவிட்டன” என்றும் அவர் எழுதியுள்ளார்.

இச்செய்தி, ஜூலை 9-ஆம் திகதி முடிவடைய இருக்கும் “தற்காலிக வரிவிதிப்பு இடைநிறைவு” காலக்கெடுவிற்கு முன்னதாக வெளியாகியுள்ளது. இதற்குப் பிறகு, புதிய வரி கட்டணங்கள் அறிவிக்கப்படலாம் என்று ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அமெரிக்காவிற்கு எதிரான வரி விவகாரங்களில் ஜப்பான் முக்கியமான நாடாக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. முன்பு, ஜப்பானிய பொருட்கள் 24% வரிவிதிப்புக்கு உட்பட்டிருந்தன. தற்போது அவை 10% சர்வதேச வரிக்கு உட்பட்டுள்ளன.

ட்ரம்ப் அனுப்பவுள்ள கடிதத்தின் உள்ளடக்கம் என்ன என்பதைத் தற்போதைக்கு அவர் விவரிக்கவில்லை. ஆனால், இது அமெரிக்கா-ஜப்பான் வர்த்தக உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.