;
Athirady Tamil News

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 2 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு: மொத்த எண்ணிக்கை 47 ஆக உயர்வு

0

செம்மணியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது மேலும் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 47 எலும்பு கூட்டு தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் இன்றைய தினம் 02 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.