;
Athirady Tamil News

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் – டிரம்ப் சந்திப்பு

0

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மெலனியா டிரம்ப் ஆகியோர் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் வரவேற்றனர். இந்த சந்திப்பு, அமெரிக்கா-இங்கிலாந்து உறவை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் தொடக்கமாக அமைந்தது. இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஈரானுக்கு எதிரான டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான நிலைப்பாடு மற்றும் இங்கிலாந்து மீதான டிரம்பின் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.