;
Athirady Tamil News

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்; கடலென குவிந்த பக்தர்கள்!

0

ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மனின் தேர்த் திருவிழா இன்று காலை கோலாகலமாக இடம்பெற்றது.

இதன்போது உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் இருந்து நயினை மப்பாளை தரிசிக்க அதிகாலை வேளையில் பக்தர்கள் கூட்டம் கடலென ஆலத்தில் திரண்டிருந்தனர்.

கடலென குவிந்த பக்தர்கள்
நாகபூசணி அம்மாளின் திருந்தேர் வடம் பிடிப்பதற்கு பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றிருந்தனர். அதோடு அதிகாலை அம்பாள் வீதியுலா வந்த காட்சி பக்தர்களுக்கு பெரின்பத்தை அளித்திருந்தது.

மதுரைக்கு மீனாட்சி அம்பாள் போல , நயினாதீவை தன் கடைக்கண் பார்வையால் மிகவும் அழகாக ஆட்சி புரிகின்றாள் நயினாதீவு நாகபூசணி அம்பாள். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைதீர்பதில் பெற்ற தாய்க்கு ஈடு இணையானவள் நாகபூசணி அம்பாள்.

தேர்திருவிழாவில் கடலென குவிந்த பக்தர்கள் தங்கள் நேர்ந்திகடன்களையும் நிறைவேற்றிய எநிலையில் தேரிறி வந்து தன்னை நாடிவந்த பக்தர்களுக்கு நயினை நாகபூசணி அம்மாள் அருள் வழங்கியமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

நயினை நாகபூசணி அம்மாளின் வருடாந்த மகோற்சப பெருவிழாவில் இன்று தேர்திருவிழாவும் நாளை வியாழக்கிழமை(10) தீர்த்தோற்சபமும் இடம்பெவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.