;
Athirady Tamil News

தமிழ் தெரியாத வட மாநிலத்தவர் கேட் கீப்பராக இருந்தது தான் விபத்துக்கு காரணம்.., பெற்றோர் ஆதங்கம்

0

தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்துவது தான் கடலூர் விபத்துக்கு காரணம் என்று மாணவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.

பெற்றோர் ஆதங்கம்
தமிழக மாவட்டமான கடலூர், செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது பள்ளி வாகனம் மீது ரயில் மோதியுள்ளது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற அதிவிரைவு ரயிலானது வேனின் மீது மோதியுள்ளது.

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ரயில் வரும் போது ரயில்வே கேட் திறந்து இருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பள்ளி வேன் மீது ரயில் மோதுவதற்கு காரணமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோர் ஒருவர் பேசுகையில், “ரயில்வே கேட் கீப்பர் மது அருந்திவிட்டு தூங்கிவிட்டார் என்று சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும், அவர் வட மாநிலத்தவர் என்பதால் மொழி பிரச்சனை இருக்கிறது. முதலில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை இதுபோன்ற முக்கிய இடங்களில் பணியமர்த்துங்கள். ரயில்வேயின் கவனக்குறைவு தான் விபத்திற்கு காரணம்” என்று ஆதங்கமாக பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.