யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்
யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சிறிய படகொன்றில் பண்ணை கடற்பகுதிக்கு சென்று , படகில் இருந்து குதித்து கடலில் நீச்சல் அடித்த போது அவர்கள் சுழிக்குள் அகப்பட்டு , கடல் நீரில் தத்தளித்த வேளை பண்ணை பகுதியில் நின்றவர்கள் அதனை அவதானித்து , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் , மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
நான்கு இளைஞர்களையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் நிலையில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
