;
Athirady Tamil News

மே 7 ஆம் திகதி தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் விஜய்!

0

தமிழக சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றி கழகம்.

இந்நிலையில் மே 7 ஆம் திகதி நேரு விளையாட்டரங்கில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன .

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் பதவியேற்பு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழாவுக்கு, பல்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்ஜிஆருக்கு பின்னர் அரசியலில் பெரும் புரட்சியை படைத்த விஜய்
தமிழக வரலாற்றில் எம்ஜிஆருக்கு பின்னர் அரசியலில் பெரும் புரட்சியை படைத்துள்ளார் விஜய். இந்நிலையில் விஜய்யின் வெற்றியை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் .

50 ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிட அரசியலின் கோட்டையாகத் திகழ்ந்து வந்த தமிழ்நாட்டில், பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்து வந்த திமுகவை வீழ்த்தி, விஜய்யும் அவரது கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகமும்’ (TVK) அரசியல் களத்தில் ஒரு பிரம்மாண்டமான பதிவு செய்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் திமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.