;
Athirady Tamil News

ஜப்பானில் தொடரும் மக்கள் தொகை சரிவு: குழந்தைகள் எண்ணிக்கை 1.33 கோடியாக வீழ்ச்சி

0

டோக்கியோ,

ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று (மே 5) ஜப்பானில் ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படும் நிலையில், அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

14 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 1.329 கோடியாக (13.29 மில்லியன்) குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.50 லட்சம் குறைவாகும்.

மொத்த குழந்தைகளில் சிறுவர்கள் 68.1 லட்சம் பேரும், சிறுமியர் 64.8 லட்சம் பேரும் உள்ளனர். 12 – 14 வயதுடையவர்கள் 30.9 லட்சம் பேர். 0 – 2 வயதுடையவர்கள் வெறும் 21.3 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இது ஜப்பானில் பிறப்பு விகிதம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2025-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை வாய்ப்பு அறிக்கையின்படி, 4 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில், தென்கொரியாவிற்கு (10.2%) அடுத்தபடியாக, ஜப்பான் (10.8%) மிகக் குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.