;
Athirady Tamil News

ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் பணியாற்றிய ஆர்வலர் சுட்டுக்கொலை!

0

மேற்கு கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால், பாலஸ்தீன ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ஒடேஹ் முஹம்மது ஹதாலின் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாலஸ்தீன சமூகத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் வன்முறைகள் குறித்து “நோ அதர் லேண்ட்” எனும் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த ஆவணப் படமானது, மார்ச் மாதம் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

இந்த ஆவணப் படத்தை இயக்கிய இயக்குநர்களுக்கு, பெருமளவில் தரவுகள் வழங்கி அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர், பாலஸ்தீன ஆர்வலரும், ஆசிரியருமான ஒடேஹ் முஹம்மது ஹதாலின்.

மசாஃபர் யட்டா பகுதியிலுள்ள உம் அல்-கெயிர் எனும் கிராமத்தில், ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய தாக்குதலின் போது, ஹதாலின் சுட்டுக்கொல்லப்பட்டதாக, பாலஸ்தீன அதிகாரத்தின் கல்வித்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் (ஜூலை 28) உறுதி செய்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் காவல் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஒரு இஸ்ரேலியர் மற்றும் 4 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், ஹதாலின் கொல்லப்பட்டதற்கு, ”நோ அதர் லேண்ட்” ஆவணப் படத்தின் இயக்குநர்களான இஸ்ரேல் பத்திரிகையாளர் யுவல் ஆப்ரஹாம் மற்றும் பாலஸ்தீன பத்திரிகையாளார் பசெல் அட்ரா ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில், இரங்கல்களையும், கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.