;
Athirady Tamil News

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

0

ஒடிஸாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புரி மாவட்டம், பயாபாா் கிராமம் அருகே பாா்கவி ஆற்றங்கரையில் கடந்த ஜூலை 19-இல் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி 70% தீக்காயங்களுடன் உயிர் பிழைக்க போராடி உயிரிழந்தார். தனது தோழியின் வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த அப்பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை, இருசக்கர வாகனங்களில் வந்த 3 இளைஞா்கள் வழிமறித்தனா். அந்தச் சிறுமியை அவா்கள் வலுக்கட்டாயமாக ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்று, அவரின் உடல் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்துவிட்டு, தப்பிச் சென்றனா்.

தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய சிறுமி அருகேயுள்ள வீட்டுக்குச் சென்று உதவி கேட்டுள்ளாா். தீயில் எரிந்த சிறுமியை மீட்ட அவ்வீட்டினா், பிபிலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக அவா் புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். 75 சதவீத தீக்காயங்களுடன் புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தாா்.

அதன்பின், அவர் மேம்பட்ட சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில், அவர் உயிரிழந்ததாக ஒடிஸா முதல்வர் மோகன் சரண் மஜ்ஜி சனிக்கிழமை(ஆக. 2) வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார். சிறுமி மரணம் மிகுந்த வேதனையளிப்பதாகவும், அவரது ஆன்மாம சாந்தியடையட்டும் என்றும் அவர் வெலியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.