;
Athirady Tamil News

அண்டார்டிகாவிலிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட விஞ்ஞானிகள்… களத்தில் விமானப்படை

0

நியூசிலாந்தின் விமானப்படை மிகவும் கடினமான நடவடிக்கையாக அண்டார்டிகாவில் ஆராய்ச்சி தளத்திலிருந்து மூன்று விஞ்ஞானிகளை வெளியேற்றியுள்ளது.

கடுமையான வானிலை மற்றும் முழுமையான இருளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் McMurdo நிலையத்தில் இருந்தே உறையவைக்கும் -24C வெப்பநிலையின் நடுவே ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிவியல் அறக்கட்டளை ஊழியர்கள் மீட்கப்பட்டனர்.

ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாகவும், மற்ற இருவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது என்றும் ராயல் நியூசிலாந்து விமானப்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சவால் மிகுந்த இரவு நேர நடவடிக்கையை அடுத்து C-130J Hercules விமானமானது புதன்கிழமை காலை நியூசிலாந்தின் தெற்கு தீவில் உள்ள கிறைஸ்ட்சர்ச்சில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

அவசரநிலை குறித்த குறிப்பிட்ட விவரங்களை நியூசிலாந்து விமானப்படை வழங்கவில்லை, ஆனால் மீட்கப்பட்ட ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், நியூசிலாந்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

19.5 மணி நேரத்தில்
மேலும், கடுமையான வானிலை மற்றும் இருளுக்கு மத்தியில் அண்டார்டிகாவில் இந்த அவசர நடவடிக்கையை முன்னெடுக்க விமானப்படை விமானிகள் செய்யக்கூடிய கடினமான பணிகளில் ஒன்றாக ஆக்கியது என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆக்லாந்தில் இருந்து கிறைஸ்ட்சர்ச்சிற்கு விமானம் கொண்டு வரப்பட்டது, அங்கு விமானக் குழுவினர் உகந்த பறக்கும் நிலைமைகளுக்காகக் காத்திருந்தனர்.

ஆனால் செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் நடவடிக்கை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டதும், இரவுக்குள் திட்டமிட்ட பணிகளை முடிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

விமான பயணத்தின் நடுவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஒரு மருத்துவ அதிகாரி உட்பட பாதுகாப்புப் படை மருத்துவப் பணியாளர்கள் விமானத்தில் இருந்துள்ளனர்.

மொத்த நடவடிக்கையும் சுமார் 19.5 மணி நேரத்தில் முடித்துள்ளனர். இந்த நிலையில், இக்கட்டான சூழலில் நியூசிலாந்தின் விமானப்படையின் துணிச்சலுக்கு அமெரிக்க தூதரகம் தனது பாராட்டுகளை தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.