;
Athirady Tamil News

சம்மாந்துறை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

0
video link-

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் 2025 ஆண்டிற்கான அரையாண்டு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் தலைமையில் இன்று பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள், சுற்று சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறை உடைகள் , விடுதிகள் , அலுவலகங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதார முறைகள் உடைகள் வாகனங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸ் நிலையத்திலுள்ள பௌதீக வள பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார்.

இறுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிப்படுத்தல் வகுப்பு அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.