;
Athirady Tamil News

உப்புக்கு பதில் இந்த பொருள்.., ChatGPT-யிடம் ஆலோசனை கேட்டதால் உயிருக்கு போராடும் நபர்

0

உப்புக்கு பதிலாக ஏஐ பரிந்துரைத்த பொருளை எடுத்துக் கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக மாறியுள்ளது.

தற்போதைய காலத்தில் AI வந்தவுடன் நமக்கு எழும் சந்தேகங்களுக்கு அதில் கேட்டு தான் தெளிவடைகிறோம். இதனால், சில நன்மைகள் இருந்தாலும் பல தீமைகளும் உள்ளன என்றே சொல்லாம்.

அந்தவகையில், நபர் ஒருவர் ஆரோக்கியமான உப்பு மாற்றுகளை கேட்டு ChatGPT-யிடம் ஆலோசனை கேட்டதால் உயிருக்கே ஆபத்தாக மாறியுள்ளது.

அதாவது உப்புக்கு மாற்றாக “Sodium bromide” என்ற நச்சுப் பொருளை பயன்படுத்துமாறு AI பரிந்துரைத்துள்ளது.

அந்த நபரும் இதற்காக எந்தவொரு சரிபார்ப்பும் இல்லாமல் அதனை எடுத்துக் கொண்டதால் விஷமாக மாறி அவரது உயிருக்கே ஆபத்தாக மாறிவிட்டது.

அந்த நபர் இந்த நச்சுப் பொருளை தொடர்ந்து 3 மாதங்கள் எடுத்து வந்ததால் குழப்பம், சித்தப்பிரமை மற்றும் கடுமையான மனநிலை மாற்றங்களை எதிர்கொண்டார். மேலும், தண்ணீர் தாகம் எடுத்தாலும் அவர் குடிக்க மறுத்தார்.

அதோடு, அவருக்கு சோர்வு, தூக்கமின்மை, முகத்தில் முகப்பரு ஆகியவை இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர் .

இதனால் மருத்துவர்கள் அவருக்கு நரம்புகள் வழியாக ஆன்டிசைகோடிக் மருந்துகள் மற்றும் மனநல சிகிச்சைகளை வழங்கினர். தொடர்ந்து அவர் 3 வாரங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைகள் மேற்கொண்டார். பின்னரே இதற்கான காரணமும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் கேட்ட கேள்வியையே ChatGPT-யிடம் முன்வைத்தனர். அப்போதும், நச்சுப்பொருளை தான் AI பரிந்துரைத்துள்ளது.

1800களின் பிற்பகுதியிலும் 1900களின் முற்பகுதியிலும் தலைவலி முதல் பதட்டம் வரையிலான நோய்களுக்கு புரோமைடு உப்புகள் பரிந்துரைக்கப்பட்டது.

இதனால் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் கூட இது 8 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 1975 மற்றும் 1989 க்கு இடையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், உட்கொள்ளக்கூடிய பொருட்களில் புரோமைடை படிப்படியாக நீக்கியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.