;
Athirady Tamil News

கடற்கரையில் சடலமாக கிடந்த பெண் ; மர்ம மரணத்தால் குழப்பத்தில் பொலிஸார்

0

மாத்தறை – கிரிந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொடெல்ல கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (8) மாலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் எனவும், சுமார் 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும், பழுப்பு நிறத்திலான ஆடை அணிந்துள்ளார் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திஸ்ஸமஹாராம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கிரிந்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.