புங்குடுதீவில் வீதியை மறித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
தீவக சிவில் சமூகம், புங்குடுதீவு தனியார் பேரூந்து சங்கம், போன்ற பொது அமைப்புகள், வாள்வெட்டில் பலியான அமரர். அகிலனின் உறவினர்கள் ,வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் , யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் , புங்குடுதீவு தீவக சிவில் சமூக உபதலைவர் அமைப்பின் செயலாளர் கருணாகரன் குணாளன் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இணைந்து
புங்குடுதீவின் பல்வேறு பகுதியில் கடந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் நடைபெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும் என்றும்
மண்டைதீவு மற்றும் புங்குடுதீவு மடத்துவெளி சோதனைச் சாவடிகள் உடனடியாக மீளவும் அமைக்கப்படவேண்டும்,
பாதிக்கப்பட்ட அமரர்.அகிலனின் குடும்பத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் ,
புங்குடுதீவு மத்தியில் நிரந்தர காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் புங்குடுதீவு பெற்றோல் நிரப்பும் நிலைய முன்றலில் பிரதான வீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்துக்கள் நடைபெறாவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் . இதன்போது பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். வாள்வெட்டு தாக்குதலில் பலியான அமரர் அகிலனின் பூதவுடல் அங்கு கொண்டு வரப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்தது .
போன்ற கோரிக்கைகள் யாழ் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்ததுடன், இப்போது அமரர் அகிலனின் உடலானது தகனக் கிரியைக்காக புங்குடுதீவு கேரதீவு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க புதைக்கப்பட்டது.





