;
Athirady Tamil News

அரிசோனாவின் கட்டிடங்களை மூடிய புழுதி புயல் – 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

0

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரை கடுமையான ஹபூப்(haboob) புழுதி புயல் தாக்கியுள்ளது.

இந்த புயலை தொடர்ந்து கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக, அரிசோனாவில் சுமார் 39,000 பேர் மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.

அரிசோனாவில் புழுதி புயல்
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக வாகன ஓட்டிகள் உடனடியாக வீட்டிற்கு சென்றனர்.

மேலும், அங்குள்ள ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்தில் எந்த விமானமும் தரையிறங்கவோ அல்லது புறப்படவோ முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு விமான நிலைய செயல்பாடுகள் முடங்கியது.

இதில், இரவு 8 மணி நேர நிலவரப்படி, 104 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது.

ஹபூப் என்பது இடியுடன் கூடிய மழை மற்றும் காற்றில் இருந்து வெளிப்படும் தூசி மற்றும் மணலால் ஆன பல ஆயிர அடி உயர புயல் ஆகும்.

பொதுவாக மழைக்காலங்களில், வறண்ட நிலப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு அமெரிக்க பகுதிகளில் இந்த ஹபூப் புயல் காணப்படுகிறது.


மேலும், இந்த ஹபூப் புழுதிப்புயல் 10000 அடி உயரம் வரை உயரும் என்றும், மணிக்கு 50 முதல் 70மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறபடுகிறது.

பெரும் சுவர் போல வரும் இந்த புயல், பீனிக்ஸ் நகர கட்டிடங்களை மூடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.