அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவையை நிறுத்திய மற்றொரு நாடு
இந்தியா, நியூசிலாந்து வரிசையில் அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவையை நிறுத்திய நாடுகளின் பட்டியலில் மற்றொரு நாடு இணைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் தேசிய அஞ்சல் நிறுவனம் ‘Australia Post’ அமெரிக்கா மற்றும் பியூர்டோ ரிகோவிற்கான (Puerto Rico) அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதற்கான முக்கிய காரணம், அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரி விதிமுறைகள்.
முன்னதாக 800 டொலருக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்கள் வரிவிலக்குடன் அனுப்ப அனுமதி இருந்தது.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் இந்த ‘de minimis’ விதியை ரத்து செய்ததால், இப்போது 100 டொலருக்கும் குறைவான பொருட்களைத் தவிர எல்லாவற்றிற்கும் வரி விதிக்கப்படுகிறது.
இது போன்ற அதிக வரிகள் காரணமாக, அவுஸ்திரேலியாவிற்கு முன்பே இந்தியா, ஜேர்மனி, ஜப்பான், கொரியா போன்ற பல நாடுகளும் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவையை நிறுத்தியுள்ளன.
ஜப்பான் மற்றும் கொரியா UPS போன்ற மாற்று சேவைகளை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளன.
இருப்பினும் Fed EX Australia தனது சேவையை தொடரும் என அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் உலகளாவிய அஞ்சல் சேவையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன.