வேலணை பிரதேச செயலர் பதவியேற்பு
வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தனபாலசிங்கம் அகிலன் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் கடமையேற்றார்.
இதன் போது மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தார்கள்.
இந்நிகழ்வினை தொடர்ந்து வேலணை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பிரதேச செயலர் பொறுப்பேற்றார்.



