வயிறு குழுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்!
ஷாங்காய் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-இன் முகபாவணை இணைய தளங்களில் மீம்ஸ் பொருளாக மாறியுள்ளது.
வைரலான பாகிஸ்தான் பிரதமரின் முகப்பாவனை
சீனாவின் டியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய பல்வேறு நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் சந்தித்து கொண்டனர்.
Thread 🧵 of meme template during Sco summit pic.twitter.com/aIVfZIPiSO
— knowledge adda (@educatedbano) September 1, 2025
மாநாட்டின் குறிப்பிட்ட சில தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது, அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகிய மூவரும் மிக நெருக்கமாக நட்புறவுடன் சிரித்து பேசிக் கொண்டது அதிக கவனம் பெற்றுள்ளது.
இவற்றில் குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனித்து விடப்பட்ட தருணமும், புடின் – மோடி கடந்து சென்ற போது ஷெபாஸ் ஷெரீப்-இன் முக பாவனையும் இணையத்தில் மீம்ஸ்களின் ஆதாரமாக மாறியுள்ளது.
🚨 Leaked audio from SCO 😂😅
Uss taraf mat dekhna ek bheekari katora lekar khada hai. 💯😂🇵🇰#SCOSummit2025 pic.twitter.com/vmFhOkU2Oj
— Wahida 🇦🇫 (@RealWahidaAFG) September 1, 2025
உலக அளவில் உள்ள சமூக ஊடக பயனர்கள் இந்த தருணத்தை நகைச்சுவை சித்திரங்களாக வடிவமைத்து மீம்ஸ் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
உச்சி மாநாட்டில் இருந்து கசிந்த ஆடியோ என பெயரிடப்பட்ட வீடியோ மீம் ஒன்றில், மோடி, புடின் மற்றும் ஷி ஜின்பிங் மூவரும் பேசிக்கொள்ளும் வேடிக்கான தருணம் இணையவாசிகள் மத்தியில் சிரிப்பலையை வெடிக்க செய்து வருகிறது.