;
Athirady Tamil News

திருகோணமலை சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்து

0

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து நேற்று இரவு (05) இரவு 07.45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ பற்றியமை காரணமாக ஓலையினால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு அறை முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.