காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு
& ‘ மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி திங்கட்கிழமை(8) இரவு மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன் போது காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகம் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
குறித்த இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகமும் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டு கழகமும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடின
குறித்த போட்டியில் காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகம் ஆர்வத்துடனும் விடா முயற்சியுடனும் சிறந்த களத்தடுப்புடன் விளையாடி மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டு கழகத்தை இறுதியில் (03:01) என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.இறுதிப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) நடைபெறவுள்ளது.











