;
Athirady Tamil News

பேஸ்புக் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண் ; இரும்புத் தடியால் அடித்து கொன்ற காதலன்

0

இந்தியாவில் காதலனை சந்திக்க 600 கிலோ மீட்டர் பயணம் செய்த பெண் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவை சேர்ந்த 37 வயது அங்கன்வாடி மேற்பார்வையாளர் முகேஷ் குமாரி என்ற பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் பார்மர் நகரில் வசித்து வரும் மனா ராம்(Manaram) என்ற பள்ளி ஆசிரியருடன் கடந்த அக்டோபர் மாதம் பேஸ்புக்கில் நண்பராக அறிமுகமாகி பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனா ராமிடம் தெரிவித்துள்ளார், ஆனால் மனா ராம் தனது முதல் திருமண விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி மறுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 10ம் திகதி முகேஷ் குமாரி தனது ஆல்டோ காரில் சுமார் 600 கிலோ மீட்டர் பயணம் செய்து மனா ராமின் கிராமத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரிடம் அவரது உறவை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் காதலன் மனா ராம் கடும் கோபம் அடைந்துள்ளார், அத்துடன் பொலிஸார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சமாதானப்படுத்திய நிலையில் திருமணம் குறித்து பிறகு பேசலாம் என முகேஷிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் தனியாக இருக்கும் நேரத்தில் இரும்புத் தடியால் முகேஷின் தாக்கி மனா ராம் கொலை செய்துள்ளார்.

மேலும் முகேஷை காரில் அமர வைத்து விபத்து போல உருவாக்க காரை சாலையில் இருந்து உருட்டி விட்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவத்தை விசாரித்த பொலிஸார், முகேஷ் இறந்த போது இருவரின் செல்போன்களும் ஒரே இடத்தில் இருந்ததை கண்டுபிடித்து மனா ராமிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். இறுதியில் மனா ராம் குற்றத்தை ஒப்புக்கொண்ட தோடு கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.