;
Athirady Tamil News

மூளையை உண்ணும் அமீபா-வின் மர்மம்! கேரளாவில் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை

0

கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவின் நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

கேரளாவில் அதிகரிக்கும் நோய் பாதிப்பு
கேரளாவில் பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்(Primary Amoebic Meningoencephalitis) எனப்படும் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மூளை தொற்று நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொற்றுநோய் பாதிப்பானது மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நைசீரியா ஃபோலேரி( Naegleria fowleri) என்ற அமீபா மூலம் ஏற்படுகிறது.

ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவான நிலையில் தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது, மேலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதை சுகாதார சேவை இயக்குனரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கேரளாவில் இந்த ஆண்டு 66 பேர் வரை இதில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாதம் மட்டும் 19 பாதிப்புகளும், 7 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.

பரவும் விதம்
பொதுவாக இந்த அமீபா தொற்றானது குளம், ஏரி, ஆறுகள் போன்ற சில அசுத்தமான நீர் நிலைகளிலும், குளோரின் கலக்கப்படாத நீச்சல் குளங்களிலும் குளிக்கும் போது மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆனால், அதே சமயம் நீர்நிலைகளுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத வீட்டில் உள்ள 3 மாத குழந்தைக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது சுகாதார அதிகாரிகளை குழப்பமடைய செய்துள்ளது.

இதனால் இந்த அமீபாவுக்கு புதிய பரவும் வழிகளும் இருக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

உலகளவில் இந்த நோய்தொற்றின் இறப்பு விகிதம் 97%, கேரளாவில் 24% என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.